Tuesday, 24 October 2017

சவூதியில் பஸ் கட்டணத்தை விட குறைந்த விலையில் விமானச் சேவை! மக்கள் மத்தியில் கடும் வரவேற்பு!

சவுதி அரேபியாவில் ரியாத் மற்றும் ஜெத்தாஹ் இடையே புதிய உள்நாட்டு விமான சேவை Flyadeal சென்ற செப்டம்பர் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளது.

பேரூந்து கட்டணத்தைவிட குறைவான விலையில் (ஆரம்ப விலை 98) சேவையை செய்து வருகின்றது. பேரூந்தில் இவ்விரு நகருக்கு இடையே 950 கிலோ மீட்டர்கள்.. கடக்க 12 மணி நேரமாகும். ஆனால் வானூர்தியில் 90 நிமிடங்களில் சேர்ந்து விடலாம்.

ஜெத்தாஹ்வில் இருந்து ரியாத்திற்கு காலை 8.05, மதியம் 1.10, 3.40 மாலை 3.40 &/இரவு 8.10 க்கு புறப்படுகின்றது.  அதே போல்  ரியாத்திலிருந்து ஜெத்தாஹ்க்கு காலை 10.15, மதியம் 3.20, மாலை 5.50,  இரவு 8.25 & 10.35 க்கு உள்ளது.

வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் கட்டணம் 148, 208, 228 ரியால்கள் வரை நீளும் சேவைகள் மக்களிடையே குறிப்பாக நேரத்தை வெகுவாய் மிச்சப்படுத்தும் காரணத்திற்காகவும் வரவேற்பை பெறுகின்றது.
இணையத்தளம் - https://www.flyadeal.com/en/

Author: verified_user

0 comments: