விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது மடிக்கும் வசதி கொண்ட மொபைல்போன்!

Published On Sunday, 8 October 2017 | 15:09:00

தொழில்நுட்ப சந்தையில் சேதைனை முயற்சியில் இருந்த மடிக்கும் வசதியுடன் கூடிய மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.
மொபைல் போன்கள் தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டது எனவே அவற்றை மக்கள் விரும்பும் வகையில் வடிவமைப்பதில் பல நிறுவனஙங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதில் புதிய வகையான மக்கள் வசதிக்கேற்ப மடித்து வைத்துக் கொள்ளும் வகையில் மொபைல் போன்களை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அப்படி மடித்து வைத்துக்கொள்ளக் கூடிய போல்டிங் மொபைல் போனை சாம்சங் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.
இந்த போல்டிங் மொபைல் போன் குறித்த அறிவிப்பொன்றை கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனம் வௌியிட்டிருந்தது.
தற்போது அந்த போல்டிங் மொபைல் போனை விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த போன் 7 இன்ச் தொடு திரை வசதியுடன் இருக்கலாம் எனவும் அதனை மடிக்கும் போது கையடக்க அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
விரைவில் வௌியாகவிருக்கும் இந்த போல்டிங் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved