Tuesday, 24 October 2017

சாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ மயிரிழையில் தப்பியது ஜெட் ஏர்வேஸ் விமானம்! அதிர்ச்சி சம்பவம்!


120 பயணிகளுடன் டெல்லியிலிருந்து இந்தூர் சென்ற ஜெட் விமானத்தில் பயணி ஒருவரின் பையிலிருந்து சாம்சங் J7 என்ற போன் வெடித்ததால் விமானத்தில் புகை பரவியது. அந்தப் பையில் மேலும் 2 போன்களும் இருந்தன.

விமானம் டெல்லியிருந்து புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானத்தில் இருந்த தீ அணைப்பான் (Extinguisher) வேலை செய்யாததால் பயணிகள் மத்தியில் பீதி பரவியது எனினும் விமானப் பணியாளர்கள் அந்தப் பையை தண்ணீரில் முக்கி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: