Breaking News

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு, நால்வர் தற்கொலை - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சிச் சம்பவம்

(பாறுக் ஷிஹான்)கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் கணவர் மரணமடைந்திருந்த நிலையில் கடும் வறுமையில் இருந்த அரியாலை ஏ.வி ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை   குறித்த   இளம் குடும்பப் பெண்  அழுத்தம் தாங்கமுடியாது தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.  

30 வயதுடைய டைய குறித்த பெண்  மனரீதியாக கடுமையான தாக்கங்களை எதிர்கொண்ட நிலையில்    தனது பிள்ளைகளான  கிருசாந்து சுநேத்திரா வயது 28 கிருசாந் கருசா-4 சாயித்தி வயது 2 சரவணன் வயது 1 ஆகியோருடன்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கணவர் தற்காலை செய்துகொண்ட நிலையில் இன்று அவரது குடும்பமே தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தற்போது குறித்த நால்வரது உடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

மேலும்    நண்பர் ஒருவருக்கு  கொடுத்த கடனை திருப்பி தராத காரணத்தால்  கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினால் தானும் பிள்ளைகளும் தற்கொலை செய்வதாகவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் தற்போது இப்பெண் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

No comments