Tuesday, 24 October 2017

மோசமான வாய் துர்நாற்றம்: எதன் அறிகுறி தெரியுமா?

உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிப்படுத்த சில அறிகுறிகள் தென்படுவது இயல்பானது.

அதன் அடிப்படையில் நம் உடம்பில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல், பாதிக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகளை பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்?

நம் வாயில் இருந்து கடுமையான நாற்றம் வந்தால், நம் உடலில் அம்மோனியா அதிகமாக உற்பத்தியாகி, அதை கல்லீரலால் சிறுநீரகத்திற்கு அனுப்ப முடியவில்லை, கல்லீரலின் செயல்பாடு சீராக இல்லை என்பதை குறிக்கிறது.

கல்லீரல் சீராக இயங்கவில்லை என்றால் நம் சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு நிலை உண்டாகும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கமாக காணப்படும்.

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில நேரத்தில் சருமத்தில் உள்ள நிறமிகள் அதன் நிறத்தை இழந்து, சருமத்தில் திட்டு திட்டாக வெள்ளை நிறத்தில் அறிகுறிகள் தென்படும்.

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கருமையாக அல்லது மிக அடர் பழுப்பு நிறத்தில் சிறுநீர் கழிவுகள் வெளியேற்றப்படும்.

Author: verified_user

0 comments: