Breaking News

காரைதீவில் விசித்திர வாழைமரம்! குவியும் மக்கள் (படங்கள் இணைப்பு)

காரைதீவு - 1ஆம் பிரிவு விபுலானந்த வீதியிலுள்ள வீடொன்றில் விசித்திர வாழை மரம் ஒன்று காணப்படுகின்றது.

இதில் வாழை மரம் ஒன்றின் அடியிலிருந்து 2 அடி உயரத்தில் இடைநடுவில் வாழைக்குலை தள்ளியுள்ளது.

6 அடி மெலிந்த உயரமான வாழை மரத்தின், அடியிலிருந்து 2 அடி உயரத்தில் சுமார் 4 சிறிய சீப்புகளுடன் இக்குலை தள்ளியிருக்கிறது.

வாழை மரத்தின் மேற்பாகத்தில் குலை தள்ளுவதே வழமை. எனினும் இந்த வாழைமரம் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

இடைநடுவில் குலைதள்ளி உள்ள குறித்த அதிசயத்தை அப்பகுதியில் இருக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.





No comments