மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய விரிவுரையாளர் இடைநிறுத்தம்: தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் சம்பவம்

Published On Monday, 9 October 2017 | 12:41:00

(ஏ. எல் எம். அஸ்லம்) தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத்தில் கடமையாற்றும் சிரேஸ்ட விரிவுரையாளர் ஒருவர் அதே பல்கலைக்கழகத்தில் இறுதிவருடம் கற்கும் மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் அப்பல்கலைக்கழக ஆளுகை சபை உடன் அமுலுக்குவரும் வகையில் அவ்விரிவுரையாளரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.

இதுபற்றித் தெரியவருவதாவது 

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் இறுதிவருடத்தில் கல்வி கற்கும்  மாணவியொருவர் அப்பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் துறைத்தலைவராகக் கடமையாற்றும் ஒரு சிரேஸ்ட விரிவுரையாளருக்கு கீழ் தமது ஆய்வுக்கட்டுரையை தயாரித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாய்வுக் கட்டுரையின் தலைப்பில் ஒரு சிறு மாற்றம் செய்வதற்காக குறித்த விரிவுரையாளரை சந்தித்து அது தொடர்பாக கலந்துரையாடியபோது அவ்விரிவுரையாளர் தான் அவ்விடயத்தை தங்களுக்குச் சாதகமாகக் கையாள்வதாகவும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் தனக்கு பாலியல் ரீதியாக உதவிகள் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளதாக மாணவி தர்ப்பு தெரிவித்துள்ளது.

இவரது தொந்தரவை தாங்கிக் கொள்ளாத குறித்த மாணவி தமது பெற்றோருடன் தொடர்பு கொண்டு விடயத்தை அறியப்படுத்தி அவர்கள் மூலம் தற்போதைய உபவேந்தருக்கு தெரியப்படுத்தி குறித்த விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விரிவுரையாளர் ஏற்கனவே பாலியல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு அவற்றை தமது சாமத்திய நடவடிக்கைகளால் கடந்த காலங்களில் மூடிமறைத்துள்ளதாகவும் அப்பல்கலைக்கழ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அம்பாறை மாவட்ட பெண்கள் வலுவூட்டல் அமைப்பின் வழிகாட்டலில் குறித்த மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் பொலீஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்கு என்பனவற்றுக்கு முறையிடவுள்ளதாக அமைப்பின் தலைவி குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டபோது இவ்விடயம் உண்மையெனவும் இவ்விரிவுரையாளர்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.  

அதே நேரம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள குறித்த விரிவுரையாளர். தவறான புரிதல் காரணமாக குறித்த மாணவி இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளதாக இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved