Wednesday, 25 October 2017

சவூதி அரேபியாவின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டிடம் திறந்து வைப்பு!(படங்கள்)

சவூதி அரேபியாவின் நிதி உதவியுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் நேற்று (24) பிற்பகல் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
10 மாடிகளைக் கொண்ட இந்த தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையமானது உலகிலுள்ள அதிஉயர் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டிருப்பதுடன் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் மருந்தகம், நடமாடும் கதிரியக்க நோய் நிர்ணய பிரிவு, சுகாதாரக் கல்விப் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு கட்டமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அங்கு இரண்டாம் மாடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சைக்கூடத்தையும் பார்வையிட்டார்.
தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியையும் ஜனாதிபதி அவர்கள் பதிவு செய்தார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பவுஸி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பிரதி அமைச்சர் பைஸல் காசிம், ஆகியோரும், சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பவுஸி அல்சவுட் உள்ளிட்ட அதிதிகளும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி அனில் ஜயசிங்க உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.







Author: verified_user

0 comments: