Tuesday, 24 October 2017

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஓமான் வெளியிட்டுள்ள புதிய விசிட் விசா பற்றிய அறிவிப்பு!

ஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஓமனிற்கு ஸ்பான்சர் இல்லாத நிலையில் சுயமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் ஈ-டூரிஸ்ட் விசா சலுகையை கடந்த வாரம் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனர்களுக்கு அறிவித்திருந்தது.

2040 ஆம் ஆண்டிற்குள் வருடத்திற்கு சுமார் 5 மில்லியன் சுற்றுலாவாசிகளை ஈர்க்குமுகமாக மேலும் 25 நாடுகளுக்கு ஈ-விசா திட்டம் விஸ்தீரணம் செய்யப்பட்டுள்ளது.

அவைகளாவன, ஆஜர்பெய்ஜான், ஆர்மீனியா, அல்பானியா, உஸ்பெகிஸ்தான், ஈரான், பனாமா, பூட்டான், போஸ்னியா, பெரு, பெலாரஸ், துருக்மெனிஸ்தான், மாலத்தீவு, ஜார்ஜியா, ஹோன்டுரஸ், சல்வேடர், தாஜிகஸ்தான், வியட்நாம், குவாத்தமாலா, கிர்கஸ்தான், கஜாகிஸ்தான், கியூபா, கோஸ்டாரிக்கா, லவோஸ், மெக்ஸிகோ மற்றும் நிகராகுவா.

தற்போதைய நிலவரப்படி, ஆண்டிற்கு சுமார் 2.7 மில்லியன் சுற்றுலாவாசிகளே வருகை தருகின்றனர். ஓமனின் 2016 ஆம் பட்ஜெட்டில் சுமார் 5.3 பில்லியன் ஓமன் ரியால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்தே பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது அந்நாட்டின் மொத்த வருவாயில் சுமார் 30 சதவீத பற்றாக்குறையாகும்.

1 மாத அனுமதிக்காக சுற்றுலா விசாவின் விலை 20 ஓமன் ரியால்கள். விண்ணப்பிப்பவர்களின் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாத காலம் செல்லுபடியாக வேண்டும். மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா அல்லது செங்கன் நாடுகளின் (Schengen countries) விசா வைத்திருக்க வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: