கேரளா பெண்கள் அழகு தேவதைகளாக இருப்பதற்கு இது தான் காரணமாம்!

Published On Tuesday, 10 October 2017 | 12:34:00

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கேரளா மாநிலத்துப் பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர். அவர்களின் நீலமான கருங்கூந்தல், குண்டு, குண்டு கண்கள், மென்மையான, பொலிவான சருமம் என அனைத்தும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்களாக உள்ளன. அப்படிப்பட்ட அவர்களின் அழகுக்கிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

இயற்கை அளித்த கொடை
கேரளா மாநிலம் இயற்கை அழகுகளால் சூழப்பட்ட அற்புதமான ஒரு இடம். இந்த இயற்கை அழகு, அம்மாநில பெண்களின் அழகுக்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நீளமான கருங்கூந்தல் :
கேரளத்துப் பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

ஷாம்புவிற்குப் பதிலாக சீகைக்காயை, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.
பெண்கள் அழகு தேவதைகளாக இருப்பதற்கு இது தான் காரணமாம்!

மென்மையான சருமம்: சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அத்துடன், முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள்.

இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது. கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள்.

அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

அழகான கண்கள் : கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

இதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவு தூங்கும் முன், சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved