Breaking News

விமான நிறுவனம் மூடப்பட்டதால் நடுத்தெருவில் விடயப்பட்ட பயணிகள் ! எங்கு தெரியுமா?


மொனாக் விமான நிறுவனம் பணமுடையினால் சேவையைத் தொடர முடியாத நிலையில் , வெளிநாடுகளுக்கு இவர்கள் ஏற்றிச்சென்ற 110,000 பயணிகளை திரும்பவும் , பிரிட்டனுக்குள் அழைத்துவர 60 மில்லியன் பவுண்ட்ஸ் தொகை அளவில் தேவைப்படலாமென அதிகாரிகள தெரிவித்துள்ளார்கள்.

பிரிட்டனின் சிவில் விமான அதிகார சபையின் அறிக்கையின்படி 11,000 பயணிகள் , திங்கள் இரவுக்குள் , பிரிட்டனுக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு இருக்கவேண்டும் .

நேற்று திங்கள் காலை இந்த விமான நிறுவனம் சேவையிலிருந்து நிறுத்தம் செய்திருந்தது . சமாதான காலத்தில் அரசு சந்திக்கும் மிகப்பெரிய நாடு திரும்பல் இந்தப் பணியென்று சொல்லப்படுகின்றது.

பிரிட்டனின் சரித்திரத்தில் , 50வருட கால சேவை செய்த ஒரு விமான நிறுவனம் தன் கதவுகளை இழுத்து மூடுவது இதுவே முதற்தடவை என்று சொல்லப்படுகின்றது. சுமாராக 1,900 பேர் தம் வேலை வாய்ப்புகளை இழக்கிறார்கள் . இந்தப் பயணிகளில் பாதிப்பேர் ஸ்பானிய தீவுகளில் இருப்பதாக சொல்லப்படுகின்றது .

இந்த விமான நிறுவனம் செயல் இழப்பதற்கு முன்பு , வேறு நிறுவனங்கள் இதைக் "கரைசேர்க்க" எடுத்த முயற்சி கைகூடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments