Breaking News

பாகிஸ்தானில் கனரக டிரக்குகளை இயக்கும் பெண்கள் (படங்கள் இணைப்பு)

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இஸ்லாம்கோட், தார்பார்கர் எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணியாற்றுவதற்காக பெண்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது Sindh Engro Coal Mining Company (SECMC) என்ற நிறுவனம்.



இந்த நிறுவனத்திடம் தற்போது 60 டன் நிகர எடையுள்ள 125 கனரக டிரக்குகள் இருக்கும் நிலையில் விரைவில் டிரக்குகளின் எண்ணிக்கையை சுமார் 300 முதல் 400 வரை அதிகரிக்கவுள்ளதை தொடர்ந்தே இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (Female Dump Truck Driver Programme)



பயிற்சியின் முடிவில், இவர்கள் சுரங்க கனரக வாகனங்களின் ஓட்டுனர்களாக மாதம் ஒன்றிற்கு சுமார் 40,000 பாகிஸ்தானிய ரூபாய்களை (சுமார் 380 அமெரிக்க டாலர்கள்) சம்பளமாக பெறுவர்.



எது எப்படியோ, சரிநிகர் சமத்துவம் எனும் பெயரில் பெண்களின் மெண்மை பறிக்கப்படுவதும், கனரக பணிகளுக்கு உட்படுத்தப்படுவதும் நிச்சயம் எந்தப் பெண்களுக்கு நன்மை தராது. பெண்களுடைய இயல்பும் அவர்களின் இயற்கை உரிமைகளும் காக்கப்பட வேண்டும்.



Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்








No comments