புர்காவைக் கொண்டு இந்தியர் ஒருவரின் உயிரைக் காப்பற்றிய அரபு பெண்மணி! - துபாயில் நெகிழ்ச்சி சம்பவம்!

Published On Sunday, 1 October 2017 | 10:11:00

துபாய் பெண்மணி,  தன்னுடைய புர்காவைக்கொண்டு இந்திய லாரி ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அணைத்ததோடு மட்டுமில்லாமல், அவரின் கண்ணியத்தையும் காப்பாற்றியுள்ளார்.

இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதால் தீப்பற்றிக்கொண்டன. லாரியை ஒட்டிய H. சிங் என்ற இந்தியர் தப்பிக்க முயலுமுன், அவரின் ஆடை மீது தீ பற்றிக்கொண்டது.   அந்த வழியாக காரில் சென்ற அரபுப் பெண் தன் புர்காவின்    மூலம் ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அனைத்து விட்டு, அதையே அவர் அணிந்துகொள்ள கொடுத்துவிட்டு சென்று விட்டார். காயங்களுடன்  மருத்துவமனையில் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய பெண்களுக்கு புர்கா மிகவும் முக்கியமான ஒரு அம்சம் ஆனாலும் ஒரு உயிர் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக  அதை கூட துச்சமென மதித்து செயல்பட்ட அந்த சகோதரிக்கு இறைவன் நற்கூலி வழங்கட்டும்.


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved