Wednesday, 25 October 2017

கணவருக்காக பிணை கையொப்பமிட்ட மனைவிக்கு நேர்ந்த கதி! 6 மாதம் சிறை! #இலங்கை

கணவருக்காக பிணை கையொப்பமிட்ட மனைவிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான தனது கணவருக்காக ஒரு லட்சம் ரூபா சரீர பிணை கையொப்பமிட்ட பெண் ஒருவருக்கு, ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

24 வயதான சேபாலிகா சமன்மலி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

பலங்கொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழக்கு விசாரணைகளில் கணவர் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால், பிணை கையொப்பமிட்ட மனைவிக்கு, ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்ட சமன்மலியின் கணவர், பிணை வழங்கப்பட்டதன் பின்னர் பிரதேசத்தை விட்டு சென்றுவிட்டதாகவும், குடும்பத்துடனான தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வழக்கு விசாரணையின் போது , பிணை கையொப்பிட்ட மனைவிக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

ஒரு லட்சம் ரூபா பிணைப் பணத்தைச் செலுத்தினால் இந்தப் பெண்ணை விடுதலை செய்ய முடியும் எனவும், தாயும் தந்தையும் இன்றி சிறிய பிள்ளைகள் அவதியுறுவதாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Author: verified_user

0 comments: