Breaking News

670 கோடி சவுதி நிதியில் மகாவலி அபிவிருத்தி திட்டம்; உடன்படிக்கை கைச்சாத்து!

கிண்ணியாவில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டமான மகாவலி கங்கை திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கை இன்று (24) மாலை நிதியமைச்சில் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பௌஸி அல் ஒலயான்  மற்றும் இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இத்திட்டத்தினை முன்மொழிந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இத்திட்டம் சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அதாவது அன்னளவாக இலங்கை ரூபா 670 கோடி ரூபா நிதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் கிண்ணியாவின் மூன்று போக வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கை மூலம் எமது விவசாயிகள் முன்னேற்றம் கான முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

-ஏ.எஸ்.எம்.தாணீஸ்

No comments