இரவு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் கூடு - 60 பேர் பலி 500 பேர் காயம் - அமெரிக்க வரலாற்றில் கொரூர சம்பவம்

Published On Monday, 2 October 2017 | 23:37:00

ஞாயிறு இரவு லாஸ் வேகாஸ் பகுதியில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களின் மீது, அருகாமையில் உள்ள கட்டிடத்தின் 32 வது மாடியில் இருந்து கொண்டு சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிதாரி 10 துப்பாக்கிகளில் பயன்படுத்தும் தோட்டாக்களை தொடர்ச்சியாக பயன்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 500-கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

லாஸ் வேகாசில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது அமெரிக்க வரலாற்றில் மிகவும் கொடூரமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளனர்.

லாஸ் வேகாசில் அமைந்துள்ள சூதாட்ட விடுதி, இரவு விடுதி மற்றும் ஷாப்பிங் மேற்கொள்வது என உலகெங்கிலும் இருந்து ஆண்டுக்கு 3.5 மில்லியன் மக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved