Breaking News

அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ளுபடி சலுகை அறிவிப்பு!

அமீசரகத்தின் ராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்களுக்கு 55% தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளர் ஷேக் சவுது பின் சக்ர் அல் கஸீமி அவர்கள் பதவியேற்ற 7 வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ராஸ் அல் கைமாவில் நிகழ்ந்த போக்குவரத்து குற்றங்களுக்காக அபராதம் செலுத்த வேண்டியோர் எதிர்வரும் நவம்பர் 1 முதல் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 55 தள்ளுபடியில் அபராதங்களை செலுத்தலாம் என அறிவித்துள்ளார் ராஸ் அல் கைமா காவல் துறையின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுஐமி.



55% தள்ளுபடி சலுகை அமீரகத்தின் வேறு எந்த எமிரேட்டிலும் இதுவரை வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.



Source: Gulf News

தமிழில்: நம்ம ஊரான்

No comments