Breaking News

சவூதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளாதார மண்டலம் !


சவூதியில் செங்கடல் கரையோரம் 'NEOM' என்ற பெயரில் புதிய பொருளாதார மண்டலத்தை SoftBank Group Corp என்ற வங்கியின் உதவியுடன் சவுதி அரசின் முழுமையான செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது எனினும் சவுதி அரேபியாவின் நடப்பு சட்டதிட்டங்களுக்குள் அமையாமல் தனக்கெனதொரு தனிச்சட்டங்களையும், தற்போதைய சவுதியின் வாழ்க்கை முறையிலிருந்து வேறுபட்ட நவீன போக்கையும் கொண்டிருக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானின் சமீபத்திய அனுமதிகளான மேடை இன்னிசைக் கச்சேரிகள், சினிமா தியேட்டர் அனுமதிகள், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான அனுமதி போன்றவற்றின் தொடர்ச்சியாகவே இப்புதிய பொருளாதார நகரம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

துபையின் ஜெபல் அலி பொருளாதார மண்டலத்தை முன்மாதிரியாக கொண்டு அமையவுள்ள இந்த நகரத்தில் 9 முக்கிய தொழில்துறைகளான ஆற்றல் மற்றும் நீர், இயக்கம், உணவு, உயிரியல், தொழிற்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அறிவியல், மேம்பட்ட உற்பத்தி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தப் பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக எகிப்துடன் இணைக்கும் வகையில் செங்கடல் மேல் பாலம் ஒன்று கட்டப்படும். மேலும் சவுதி, எகிப்து மற்றும் ஜோர்டானின் பொருளாதார மண்டலங்களுடன் இணைக்கபடுவதன் மூலம் 3 நாடுகளில் செயல்படும் உலகின் முதலாவது பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும்.

அவசியம் படியுங்கள்:
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (தமிழ்)


The Confessions of an economic hitman (English)


யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை (தமிழ்)


Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments