Tuesday, 10 October 2017

கத்தாரில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு! இதை செய்தால் 500 றியால்கள் அபராதம்! - புதிய சட்டம்

சிக்னல்களுக்கு நடுவில் உள்ள மஞ்சல் பெட்டிக்குள் வாகனத்தை நிறுத்தி வைத்தலுடன் தொடர்பு பட்ட  400க்கும் மேலான போக்குவரத்து மீறல்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். 

இது தொடா்பான சட்டம் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் போக்கு வரத்து மீறல்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

சிக்னல்களில் உள்ள மஞ்சல் நிறப்பெட்டிகளில் வாகனுங்களைச் செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாரதிகளுக்கு 500 ரூபா அபராதமும், 3 பாயின்களும் கழிக்கப்பட இருக்கின்றன. மேற்படி மஞ்சல் பெட்டிகளில் ஏற்படும் மீறல்களைக் கவனிக்க விஷேட கண்காணிப்பு கெமரக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக வாகனம் செல்லுவதற்கு ஒளிரும் பச்சை சிக்னலுக்கு ஏற்ப வாகனத்தைச் செலுத்தி, மஞ்சல் சிக்னல் ஒளிர ஆரம்பித்ததுல் முதல் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் வாகனத்தை நிறுத்திக் கொள்ளும் பக்குவம் உள்ள சாரதிகள் இந்த குற்றத்திலிருந்து தப்ப முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் வாழ் சொந்தங்களின் நலன் கருதி அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Author: verified_user

0 comments: