Monday, 9 October 2017

அமீரகத்தின் 5 பெரும் பணக்கார தொழில் அதிபர்கள் இவர்கள் தான் (படங்கள் இணைப்பு)

போர்ப்ஸ் (Forbes) பத்திரிக்கை நடப்பு ஆண்டிற்கான உலகளாவிய பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் 5 பேர் அமீரகத்தை சேர்ந்தவர்கள் என்பது இவர்களே அமீரக அளவில் முதல் 5 இடத்தில் உள்ளனர்.

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (Microsoft's Bill Gates) சுமார் 86 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், பொக்ஷையர் ஹத்தாவே நிறுவனத்தின் வாரன் பப்பேட் (Berkshire Hathaway's Warren Buffett) சுமார் 75.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2வது இடத்திலும், அமெஸான்.காம் நிறுவனத்தின் அதிபர் ஜெஃப் பெஜோஸ்  (Amazon.com's Jeff Bezos) 72.8 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் அமீரக அளவில் முதல் 5 இடங்களிலுள்ள பில்லியனர்களின் விபரங்கள் வருமாறு,

1. மாஜித் அல் புத்தைம் (Majid Al Futtaim) 10.6 பில்லியன் டாலர் (சுமார் 38.9 பில்லியன் திர்ஹம்) சொத்து மதிப்புடன் முதலிடத்திலும், (உலகளவில் 125 வது இடம்)
மால் ஆப் தி எமிரேட்ஸ், அமீரகம் முழுவதுமுள்ள சிட்டி சென்டர் மால்கள், கேரிஃபோர் (Carrefour) ஹைப்பர் மார்க்கெட் போன்றவை இவரது முக்கிய வியாபாரங்களில் சில.

2. அப்துல்லாஹ் பின் அஹமது அல் குரைர் (Abdullah Bin Ahmed Al Ghurair) 6.8 பில்லியன் டாலர் (சுமார் 24.9 பில்லியன் திர்ஹம்) சொத்து மதிப்புடன் 2 வது இடத்திலும், (உலனளவில் 202 வது இடம்)
1967 ஆம் ஆண்டு இவர் துவக்கிய மஷ்ரெக் பேங்கின் சேர்மனாக (Chairman of Mashreq Bank) உள்ளார், இவரது மகன் அதன் சிஇஓ (CEO).

3. அப்துல்லாஹ் அல் புத்தைம் (Abdullah Al Futtaim) 4.1 பில்லியன் டாலர் (சுமார் 15 பில்லியன் திர்ஹம்) சொத்துக்களுடன் 3 வது இடத்திலும் (உலகளவில் 427 வது இடம்)
டயோட்டா, ஹோன்டா போன்ற வாகனங்களின் விநியோகஸ்தர், துபை பெஸ்டிவல் சிட்டி, ஓரியண்ட் இன்சூரன்ஸ் நிறுவனம் போன்றவை இவரது முக்கிய வியாபாரங்களில் சில.

4. ஹூசைன் சஜ்வானி 3.7 பில்லியன் டாலர் (சுமார் 13 பில்லியன் திர்ஹம்) சொத்துக்களுடன் 4 வது இடத்திலும் (உலகளவில் 501 வது இடம்)
டாமக் ப்ராபர்டீஸ் (Damac Properties) எனும் பிரமாண்ட ரியல் எஸ்டேட் நிறுவனமே இவரது பிரதான வணிகம்.

5. ஸைஃப் அல் குரைர் (Saif Al Ghurair) 2.1 பில்லியன் டாலர் (சுமார் 7.7 பில்லியன் திர்ஹம்) சொத்துக்களுடன் 5 வது இடத்தில் உள்ளார் (உலகளவில் 973 வது இடம்)
அல் குரைர் வியாபார குழுமத்தின் (Al Ghurair Group) முன்னாள் சேர்மன், மஷ்ரெக் பேங்கில் 40% பங்கு, 2 ஆம் இடத்தில் உள்ள அப்துல்லா அல் குரைர் இவரது உடன்பிறந்த சகோதரர், மேலும் இந்த குடும்பத்தினர் பழைய துபையின் பாரம்பரிய வணிக குடும்பத்தின் வழித்தோன்றல்கள்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: