எர்துகானுக்கு எதிரான கொலை முயற்சி - 40 பேருக்கு ஆயுள் தண்டனை!

Published On Friday, 6 October 2017 | 12:47:00

துருக்கி ஜனாதிபதி ரஷிப் தையிப் எர்துகானை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட  40 பேருக்கு துருக்கி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரு பொலிஸாரைக் கொலை செய்ததாகவும் இவர்கள் மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டிலும் இவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் 2016 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சியின் போது, ஜனாதிபதி எர்துகானும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் பலாத்காரமாக நுழைந்துள்ளனர். இவர்களினால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இருந்து இரு பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved