Breaking News

விமானப் பணிப்பெண்ணைப் படமெடுத்தவருக்கு 3000 றியால்கள் அபராதம் விதித்த கத்தார் நீதிமன்றம்.!

விமானத்தில் பணி புரியும் பெண்ணை படமெடுத்த ஒருவருக்கு  3000 றியால்கள் அபராதம் விதித்தி சம்பவம் ஒன்று அண்மையில் கத்தாரில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், அதே விமாணத்தில் பணிபுரியும் பணிப்பெண்ணை படமெடுத்துள்ளார். மேலும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பாதுகாப்பு விதிகளைக் கவனத்தில் கொள்ளாது, ஏனைய பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களை  மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
பயண முடிவின் போது கைது செய்யப்பட்ட மேற்படி பயணி குற்றங்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டு 3000 றியால்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். என்றாலும் அவர் எந்த நாடு, எந்த விமானத்தில் பயணித்தார் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments