ஓமான் வாழ் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! 300 றியால் இருந்தால் FAMILY VISA கிடைக்கும்

Published On Sunday, 8 October 2017 | 17:30:00


ஓமன் நாட்டில் தற்போது குறைந்தபட்சம் 600 ஓமன் ரியால்கள் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே 'பேமிலி ரெஸிடென்ஸ் விசா' பெறும் அந்தஸ்தை பெற்றுள்ளார்கள். இந்த நடைமுறையை ஓமன் அரசின் சூரா கவுன்சில் எனப்படும் ஆலோசணை மன்றம் சரிபாதியாக அதாவது 300 ரியால்களாக குறைத்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


எனவே, 300 ஓமன் ரியால்களை சம்பளமாக பெறுபவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை ரெஸிடென்ட் விசாவில் அழைத்து தங்களுடன் வைத்துக் கொள்ளலாம். இந்த புதிய அனுமதியின் மூலம் ரியல் எஸ்டேட், சில்லரை வணிகம், இன்சூரன்ஸ் போன்ற ஓமனின் உள்ளூர் பொருளாதார ஆதாரங்கள் வளர்ச்சியுறும் என எதிர்பார்க்கப்படுவதாக 'டைம்ஸ் ஆப் ஓமன்' பத்திரிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்தத் புதிய சட்ட மாறுதல்களை ஊர்ஜிதம் செய்துள்ளது ராயல் ஓமன் போலீஸ் துறை (ROP). வருடத்திற்கு 4.3 பில்லியன் டாலர்களை வெளிநாட்டுத் ஊழியர்கள் ஓமனிலிருந்து தங்களது தாயகங்களுக்கு அனுப்பி வரும் நிலையில் இந்த புதிய குடும்ப விசா அனுமதியின் மூலம் வெளிநாட்டிற்கு அன்னிய செலாவணியாக செல்லும் ஓமனின் பொருளாதாரமும் மட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்னொருபுறம், அமெரிக்க அல்லக்கைகளான சவுதி அரேபியாவின் ஈபிஎஸ், ஓபிஎஸ்களின் ஆட்சியில் வெளிநாட்டினர் கழுத்தைப் பிடித்து தள்ளாத நிலையில் வெளியேற்றப்படுகின்றனர்.Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved