Tuesday, 24 October 2017

துபாய் பாதையோரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்தர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி !


துபையையும் ஷார்ஜாவையும் இணைக்கும் ஷேக் முஹமது பின் ஜாயித் சாலையின் எல்லையில், நேற்று மாலை மஃரிப் தொழுகை நேரத்தில் சாலை ஓரத்தில் ஒரு குழுவினர் தொழுது கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த 4 சக்கர (4 Wheel Drive) SUV மாடல் வாகனம் அந்தத் தொழுகையாளிகள் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராஷித் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வாகன டிரைவர் மேல் விசாரனைக்காக கைது செய்யப்பட்டார். போலீஸார் மிக வேகத்தை தவிர்க்கும்படியும், சாலை விதிகளை மதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: