Tuesday, 24 October 2017

அமீரகத்தில் அனலை கக்கிய சூடு காலம் நிறைவு! இன்று வெப்பநிலை 17.3 டிகிரி செல்ஷியஸாக பதிவு !


அமீரகத்தை வாட்டிய வெயிலும் வெக்கையும் ஒருவழியாக விடைபெற்றதால் வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 6.45 மணியளவில் தம்தாவில் மிகக்குறைந்த அளவாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

அமீரக வானிலை மையத்தின் இன்று காலை 8 மணி அறிக்கையின்படி, ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜைஸ் மலையில் இன்று காலை 6.30 மணியளவில் 17.4 டிகிரி செல்ஷியஸூம், அபுதாபியின் மதீனத் ஜாயித் பகுதியில் அதிகபட்சமாக 19.7 டிகிரி வெல்ஷியஸூம் பதிவாகியிருந்தன.
இன்று நிலவியது போலவே எதிர்வரும் 2 நாட்களுக்கு அமீரகத்தின் பல பகுதிகளும் பனிமூட்டமாக காணப்படும் இதனால் 500 மீட்டருக்கு மங்கலாக நிலவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: