12 நாள் சிசுவை பாதையில் விட்டுச் சென்ற பல்கலைக் கழக மாணவி சிக்கினார்! விபரமாக......

Published On Friday, 6 October 2017 | 12:55:00

சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவரை அநுராதபுரம் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமான ஹர்ஷன கெக்குனுவெல  பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஒரு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் குறித்த மாணவி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் -05- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துக்கொண்ட குறித்த மாணவி 12 நாட்கள் கடந்த நிலையில், குழந்தையை துணியினால் சுற்றி வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார்.

விட்டு சென்ற குழந்தையை மீட்ட காவல்துறையினர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியினை இனங்கண்டதோடு பொலன்னறுவையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கினையும் தாக்கல் செய்துள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவியினை சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவி புளியங்குளம் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு கணவர் ஜப்பானில் பணிபுரிவதாகவும் வீட்டுரிமையாளரிடம் கூறியுள்ளார்.

மேலும் உறவினர்களுக்கு தெரிந்தால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே தாம் குழந்தையை விட்டுச் சென்றதாகவும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved