Tuesday, 17 October 2017

பணிசுக்குள் கரப்பான்பூச்சி. பேக்கரி உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் .


பனிஸ் ஒன்றுக்குள் கரப்பான்பூச்சி காணப்பட்டதையடுத்து பேக்கரி உரிமையாளருக்கு கல்கமுவ நீதிமன்றத்தில்
10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கல்கமுவ இஹலபளுகந்த பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் பிரதேசவாசியொருவர் வாங்கிச் சென்ற பனிஸிக்குள் இறந்த நிலையில் கரப் பத்தான் பூச்சியொன்று காணப்பட்டது.


இதுவிடயமாக கல்கமுவ சுகாதார சேவை அதிகாரியின் கவனத்திக்கு
கொண்டு வரப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பனிஸ் பண்டுவஸ்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த பேக்கரி உரிமையொருவரால் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து உரிமையாளருக்கு எதிராக கல்முவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் கல்கமுவ நீதவான் எல்.டி. வருசவிதான குற்ற வாளிக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Author: verified_user

0 comments: