Breaking News

நான்கு நாட்களில் 109 தொன்கள் விற்கப்பட்ட கத்தார் உற்பத்தி FRESH VEGETABLES AND FRUITS (படங்கள் இணைப்பு)

கடந்த 26ம் திகதி கத்தாரில் உற்பத்தியாகும் உள்ளூர் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு சிறப்புச் சந்தைகளை கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுப் புறச் சூழல் அமைச்சு திறந்து வைத்தது. திறக்கப்பட்டு இன்று நான்காவது நாளாகும்.  இதுவரை மூன்று சந்தைகளிலும்(YARD) சேர்த்து 109 தொன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி மற்றும் சுற்றுப் புறச் சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. 

முதல் தினத்தில் மட்டும் 20 தொன் காய்கறி மற்றும் பழங்கள், 700 கிலோ மீன்கள், மற்றும் 164 கார்ட்டூன் முட்டைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டதாக கல்ப் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

80 கத்தார் விளைநிலங்களில் விளையும், பொருட்களே மேற்படி சந்தைக் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஜுன் 5ம் திகதி ஏற்பட்ட கத்தார் - சவூதிக் கூட்டணி முறுகல் நிலைக்குப் பின்னர் சவூதி அரேபியாவிலிருந்து மரக்கறிகள் இறக்குவதி செய்யப்படுவது நின்று போனது. 

அதன் பின்னர் GREEN HOUSE தொழில் நுட்பத்தை விரிவு படுத்தி உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க சீனாவிலிருந்து தொழில் நுட்ப வல்லுநர்களை வரவளைத்தது கத்தார் அரசு. 

அவர்களின் வழிகாட்டலின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு தற்போது அறுவடை நிலையை அடைந்துள்ள உள்நாட்டு உற்பத்திகளுக்கு தனியான சந்தை வாய்ப்புக்களை  அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். 
(உண்மையின் பக்கம்) 


No comments