Breaking News

சவூதியில் 10 வருடம் சம்பளம் வழங்கப்படாமலிருந்தவருக்கு இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டால் அதிஷ்டம்!

சவூதி அரேபியா நாட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சென்று 10 வருட காலமாக சம்பளம் வழங்கப் படாமல் இருந்த இலங்கைப் பெண் மணிக்கு நீதி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோறளவின் முயற்சியினால் 10 வருடகால சம்பள நிலுவைப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

பேராதெணிய, தெல்தொட்ட போபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ராமையா பரமேஸ்வரி (54) கடந்த (2007.12.20 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக பணிப் பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றார்.

வேலைக்கு சென்ற நாள் முதல் அந்தப் பெண்மணிக்கு பணிபுரிந்த வீட்டு எஜமான் எந்தவித சம்பளமும் வழங்கப் படாமல் இருந்ததுடன், அவரது குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தவும் வீட்டு எஜமான் இடம் கொடுக்கவில்லை.

இது விடயமாக தகவல் அறிந்த அமைச்சர் தலதா அதுகோறள பணிப் பெண் பரமேஸ்வரியின் 10 வருட கால சம்பள நிலுவைப் பணத்தை பெற்றுக் கொடுக்க துரிதமாக நட வடிக்கை எடுக்குமாறும் அப் பெண்ணை ஸ்ரீலங்காவுக்கு வரவழைத்து தருமாறு சவூதி தூதரகக் காரியாலய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

உடனடியாக செயலில் இறங்கிய சவூதி தூதரக காரியாலய அதிகாரிகள் , பரமேஸ்வரி பணிபுரிந்த வீட்டிற்கு சென்று வீட்டு எஜமானை சந்தித்து அப் பெண்ணின் 10வருடகால சம் பளத்தை வழங்குமாறு வேண்டியுள்ளனர்.

அதற்கு அந்த வீட்டு எஜமான் மறுத்துள்ளார். இதனால் தூதரக அதிகாரிகள் சவூதி அரேபிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸ் அதிகாரி கள் எஜமானை வரவழைத்து அந்தப் பணிப் பெண்ணுக்கு வழங்க வேண் டியுள்ள பாக்கி அனைத்து சம்பளத் தையும் வழங்குமாறு பணித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின்தூதரக காரியாலயத்தின் தொழில் அதிகாரி இந்திக திலகரத்ன மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஜாஸிரின் மற்றும் சவூதி பொலிஸாரின் தலையீட்டினாலும் இலங்கைப் பெண்மணி ராமையா பரமேஸ்வரிக்கு சம்பள பாக்கி நிலுவைப் பணமான சவூதி ரியால் 50 000 (ரூபா 20,41500) அவரது எஜமானரிடம் பெற்றுக் கொடுக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதி தூதரகத்தின் பாதுகாப்பு வீட்டில் தங்கியுள்ள இவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

No comments