Tuesday, 24 October 2017

அபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்டை அறிமுகம் !


அபுதாபியில் தற்போது வருடந்தோறும் புதுப்பிக்கப்படும் வாகனங்களுக்கு 'முழுக்கியா' எனும் புதிய லைசென்ஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இனி 2017 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் அட்டைகளுக்கு மாற்றாக தேதி குறிப்பிடப்படாத நிரந்தர பயன்பாட்டிற்கான லைசென்ஸ் அட்டைகள் (permanent registration card for vehicles) வழங்கப்படவுள்ளன.

வழமைபோல் ஆண்டுதோறும் வாகன சோதனைக்கு உட்படுத்துவதுடன் இன்ஷூரன்ஸ் சான்றிதழையும் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் ஆண்டு காலாவதி தேதி குறித்த நினைவூட்டல் எஸ்எம்எஸ் மூலம் ஒரு மாதத்திற்கு முன்பாக அதன் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்.

வாகன லைசென்ஸ் தேதி காலாவதி (Expiry Date) குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் அபுதாபி போலீஸின் ஸ்மார்ட் ஆப் அல்லது இணைய தளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: