சிரிக்கும் ஒவ்வொரு தடவையும், இதயம் நெஞ்சுக்கு வெளியே தள்ளப்படும் அதிசயம் - VIDEO

Published On Friday, 22 September 2017 | 12:49:00

ரஷ்­யாவைச் சேர்ந்த 7 வய­தான ஒரு சிறுமி சிரிக்கும் ஒவ்­வொரு தட­வையும் அவளின் இதயம் நெஞ்­சுக்கு வெளிப்­பு­ற­மாக தள்­ளப்­ப­டு­கி­றது.

விர்­ச­வியா எனும் இச்­சி­றுமி பிறக்­கும்­போதே அரிய வகை நோயொன்­றினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்தாள். இதனால் அவளின் உடலில் நெஞ்சு எலும்­புகள் இல்லை. நெஞ்சுப் பகு­தி­யி­லுள்ள தோலும் மிக மெல்­லி­ய­தாக உள்­ளது. இதனால், இச்­சி­றுமி சிரிக்கும் ஒவ்­வொரு தட­வையும் அவளின் இதயம் மேலும் வெளிப்­பு­ற­மாக தள்­ளப்­ப­டு­கி­றது. 

விர்­ச­வி­யா­வுக்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்பு குறித்து ஏற்­கெ­னவே செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்த போதிலும், தற்­போது அவளின் வீடி­யோ­வொன்றும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இச்­சி­றுமி அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளாள். அங்கு இச்­சி­று­மிக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு அவளின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved