குவைத் Money Exchange கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண் ! குவியும் பாராட்டுக்கள்!

Published On Sunday, 17 September 2017 | 14:40:00

குவைத் தலைநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள மஹ்பூலா (Mahboola) ஏரியாவிலுள்ள ஒரு மணி எக்ஸேஞ்சில் (Money Exchange) நடைபெறவிருந்த கொள்ளையை இந்தியப்பெண் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.


நேற்று நன்பகல் நேரத்தில் வாடிக்கையாளர் யாருமில்லாத நிலையில் 3 ஊழியர்கள் மட்டும் பணியிலிருந்த போது அரபியர்களின் உடையான கந்தூரா (தோப்) உடுத்திய ஒருவர் தனது கித்ரா துணியால் முகத்தை மூடியபடி உள்ளே வந்தவர் தனது பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காசாளரை மிரட்டினார்.சுதாரித்த இந்திய பெண் ஊழியர் ஆபத்து காலங்களில் ஒலிக்கும் அலாரத்தை நொடிப்பொழுதில் இயக்கினார். அலாரம் அலறத் துவங்கியதை அடுத்து கொள்ளையன் துண்டைக்காணோம் துணியை காணோம் என தலைதெறிக்க தப்பி ஓடினான்.மணி எக்சேஞ்சில் இயங்கிய சிசிடிவி பதிவுகளை கொண்டு கொள்ளையன் பிடிபட்டான் மேலும் அந்தப் பதிவில் இந்தியப் பெண்ணின் சமயோசித செயலும் பதிவாகி பாராட்டுக்களை குவித்துக் கொண்டுள்ளது.Source: Gulf News / Al Rai (Kuwait Daily)
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved