ஜனாதிபதி மைத்திரிக்கு HAPPY BIRTHDAY சொன்ன மஹிந்த ராஜபக்ஷ

Published On Tuesday, 5 September 2017 | 11:38:00

இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 66வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்னர்.

எனினும் ஜனாதிபதிக்கு முதன்முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்ததாக, ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொலைபேசி அழைப்பின் ஊடாக வாழ்த்து பரிமாற்றம் செய்யப்பட்டதாக செயலகம் தெரிவித்துள்ளது.

சமகால மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி உள்ளன. இந்நிலையில் முதன்முறையாக நேற்று மஹிந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய மைத்திரி, அப்போதைய ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

இதன் காரணமாக மைத்திரி - மஹிந்த ஆகியோருக்கிடையில் மனக்கசப்பு நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மைத்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச டுவிட்டர் ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்த்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நன்றி தெரிவித்திருந்தார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved