யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் பல்லி!

Published On Saturday, 9 September 2017 | 11:17:00

யாழ்ப்பாணம் .கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த உணவகத்திற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட உணவில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், உணவக உரிமையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் ஏற்றுக் கொள்ள மறுத்த உணவக உரிமையாளர், குறித்த வாடிக்கையாளரை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எமது உணவகத்தில் உணவு பெற்றுக் கொண்டமைக்கான விலைச்சிட்டை உள்ளதா? என்ன ஆதாரம் உள்ளதென உரிமையாளர் எச்சரித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் பல்லியுடன் காணப்பட்ட உணவுப் பொட்டலத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் யாழிலுள்ள மற்றுமொரு உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கற்ற முறையில் உணவு விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved