பங்களாதேஷில் தங்கியிருக்கும் ஒரு இலட்சம் ரோஹின்யர்களுக்கு புகலிடம் - துருக்கி அதிரடி முடிவு

Published On Friday, 29 September 2017 | 00:56:00

ரோஹிங்கியா அகதிகளில் ஒரு லட்சம் பேருக்கு தற்காலிக புகலிடம் அளிக்கத் தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரை சொந்த தேசமாகக்கொண்ட இவர்களை, வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக மியான்மரில் தங்கியுள்ளதாகக் கூறி இவர்களுக்குக் குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. மேலும், ரோகிங்கிய முஸ்லீம்கள் மீது பவுத்தர்கள் கொடூர இனவெறி தாக்குதல்களை நடத்திவருகிறனர். பவுத்தர்களின் இனவெறிக்கு குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 

மியான்மரில் நடக்கும் ராணுவத் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த அகதிகள் ஏராளமான துயரங்களை அனுபவித்து வருவதால் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

இந்நிலையில், துருக்கி அதிபர் தையீப் எர்டோகனின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ரோஹிங்கிய அகதிகளை கடந்த சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தற்போது துருக்கி துணை பிரதமர் ரெசெப் அக்டாக் வங்கதேசம் வந்துள்ளார். காக்ஸ் பஜார் முகாம்களில் பராமரிக்கப்பட்டுவரும் ரோஹிங்கிய அகதிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர் ஒரு லட்சம் பேருக்கு தற்காலிக புகலிடம் அளிக்க துருக்கி தயாராக இருப்பதாக அறிவித்தார்.மேலும் ரோகிங்கியா அகதிகளுக்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved