உயிரை பறிக்கும் புளூவேல் விளையாட்டு:ஒடிசாவில் தற்கொலைக்கு முயன்ற மாணவர் மீட்பு

Published On Tuesday, 12 September 2017 | 18:29:00

ஒடிசாவில் புளூவேல் விளையாட்டில் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த, 22 வயது வாலிபர் உருவாக்கிய, 'ஆன்லைன்' விளையாட்டு, புளூ வேல் சேலஞ்ச். இந்தியாவில் நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. 50 நாட்களை இலக்காக கொண்டே அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்த உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், இரவு நேரத்தில் திகில் படங்களை பார்ப்பது, கையை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடியில் இருந்து குதிப்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விபரீதமான விளையாட்டுக்கு ஏராளமான மாணவ–மாணவிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர்.

இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது. ஆனாலும், இந்த விளையாட்டு மட்டும் ஒழிந்தபாடில்லை. இதனை தடுக்கும் வகையில் விளையாட்டு தொடர்பான இணைப்புகளை தடுத்து நிறுத்தும்படி, இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. ரஷ்யா, ஜப்பானில் அதிகமானோர் விளையாடி வரும் இந்த விளையாட்டு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தை சேர்ந்த ஜலேஷ்வர் பகுதியில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில் பயின்று வரும் மாணவர் ஒருவர் ‘புளூவேல்‘ விளையாட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது. 

மனநல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மாணவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அவர் உடலில் எந்தவித காயமும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். சில நாட்களாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து மாணவரின் நண்பர்கள் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தனர். கல்லூரி முதல் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். மாணவரின் பெற்றோர் இது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர் அதன்பேரில் மாணவரை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

விசாரணையில் புளூகேம் விளையாட்டில் அவர் 11-வது ஸ்டேஜில் இருந்ததாக கூறப்பட்டது. பெங்களூரில் வசிக்கும் உறவினர் ஒருவரின் மூலம் இந்த விளையாட்டில் ஊக்குவித்தாக அந்த மாணவர் போலீசாரிடம் கூறியுள்ளார். மாணவரை தொடர்ந்து கண்காணிக்க பெற்றோருக்கு போலீசார் அறிவுறுதியுள்ளனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved