கோடைகால, பெருநாள் விடுமுறையின் பின் கத்தார் பாடசாலை, அரச அலுவலகங்கள் இன்று முதல் திறப்பு!

Published On Sunday, 10 September 2017 | 13:51:00

நீண்ட கோடை கால விடுமுறையின் பின்னர் புதிய கல்வியாண்டுக்கான கத்தாரின் பெரும்பாலான பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருநாள் விடுமுறை முடிந்து அரச ஊழியர்களும் இன்று முதல் பணிக்கு திரும்பியுள்ளனர். மேற்படி இரண்டும் மீள ஆரம்பிக்கப்பட்டமையால் இன்று காலை கத்தாரின் முக்கிய நகரில் அளகளவு வாகச நெரிசல் நிலவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக 25-40 சீட்டுக்களை உடைய 2150 பஸ் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.மேலும் கத்தார் - சவூதிக் கூட்டணி முறுகல் நிலையைத் தொடர்ந்து பாடசலைப் புத்தகங்கள் மற்றும் ஏனைய கல்வி சார் சாதானங்களுக்கு எந்த வகையான தட்டுப்பாடுகளும் இல்லாமல் முதல் நாளிளேயே விநியோகிக்கப்பட பல்வேறு நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக கத்தார் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் இந்த புதிய கல்வியாண்டில் 25 புதிய தனியார் பாடசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு 8000  மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இனிவரும் காலங்களில் காலை நேரங்ளில் அதிக போக்குவரத்து நெறிசல் நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கிலத்தில் - Gulf Times
தமிழில் - உண்மையின் பக்கம்


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved