பெண் வேடமிட்டு சென்ற, ஆண் படுகொலை - தம்புள்ளயில் சம்பவம்

Published On Wednesday, 6 September 2017 | 11:33:00

பெண் வேடமிட்டு சென்ற ஆணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை நகரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலம் ஒன்று இன்று -05- அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தம்புள்ளை களுன்தேவ வல்கம வெவ பிரதேசத்தை சேர்ந்த சனத் குமார என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இரவு நேரங்களில் பெண் ஆடையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த இளைஞன் பெண் ஆடைக்கு சமமான ஆடை ஒன்று அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நபர் விழுந்து கிடந்ததனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பலகைத் துண்டும், குடை ஒன்றும், கைக்கடிகாரம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் நீண்ட காலமாக பெண் ஆடை அணிந்து இரவில் சுற்றித் திரிவதாகவும், பெண்ணைப் போன்றே நடந்து கொள்வதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவ்வாறான பலமுறையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பல சம்பவங்களும் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved