இலங்கை பல்கலைக்கழக மாணவியின் கொடூரம்! வலைவீசும் பொலிஸார்

Published On Wednesday, 13 September 2017 | 09:51:00

அனுராதபுரத்தில் அநாதரவாக கை விடப்பட்ட சிசு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இளம் பெண் ஒருவரின் 11 நாட்களுடைய ஆண் குழந்தை ஒன்று அனுராதபுரம், புளியங்குளம் முதன்மை மருத்துவ சிகிச்சை பிரிவு நீர் தொட்டிக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை மற்றும் மகளிர் பணியகம் அதிகாரிகளினால் குறித்த குழந்தை மீட்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பிரசவித்த பெண், வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11 நாட்களுக்கு முன்னர் அனுராதபுரம் வைத்தியசாலையில் இந்த குழந்தையை பிரசவித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிசன்ஸலா என அழைக்கப்படும் குழந்தையின் தாயார் கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்பதாகவும், அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துளார்.

அவரது தொலைபேசி இலக்கத்தை தவிர வேறு எந்தவொரு தகவலுக்கும் தனக்கு தெரியாதென அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தாயாரின் இடத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved