முருங்கைப்பூ தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? உடன் பகிருங்கள்

Published On Saturday, 9 September 2017 | 11:39:00

முருங்கையின் இலை, வேர், காய், பிசின், பூ என அனைத்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. பொதுவாக இந்த முருங்கை இலை மற்றும் பூ கிருத்திகை அன்று முருகனுக்கு படைத்து வழிபடக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.
இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய முருங்கை பூவை தேநீராக பருகினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
முருங்கைப்பூ தேநீர்
முருங்கைப்பூவை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீர் நன்றாக கொதித்த உடன் இதில் கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை பாலில் இட்டு கொதிக்க வைத்தும் பயன்படுத்தலாம். இந்த முருங்கைப்பூ தே
நோய் எதிர்ப்பு சக்தி
முருங்கைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, உடலில் உண்டாகும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படுகின்றது.
சிறுநீர் கழித்தல்
சிலருக்கு இரவு நேரத்தில் நான்கு, ஐந்து தடவைகள் கூட சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், இந்த முருங்கைப்பூ தேநீரை பருகலாம்.
வெள்ளைப்போக்கு
வெள்ளைப்போக்கு உடலுக்கு தேவையற்ற சுரப்பிகளால் ஏற்படுகிறது. வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்த இந்த முருங்கைப்பூ தேநீர் பயன்படுகிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த முருங்கைப்பூ தேநீர் அறுமருந்தாக பயன்படுகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
காய்ச்சல், சளி
இந்த முருங்கைப்பூ தேநீரை காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளில் இருந்தும் விடுபட முடிகிறது. உடலுக்கு இது நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved