பெண் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்து தண்டித்த ஆசிரியர்! மாணவி செய்த தவறு இது தான்!

Published On Monday, 11 September 2017 | 16:48:00

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பாடசாலையில் படித்துவந்த, 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர்.
ஆனால், காலையில் சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவியின் பெற்றோர் இதைப்பற்றி தெளிவாக அப்பெண் பயன்படுத்தி வரும் டைரியில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவியை அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். இதற்கு அந்த மாணவி நடந்ததை எடுத்து கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார்.
ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
இந்நிலையில், தான் கழிவறையில் நிற்கும் போது அனைத்து மாணவர்களும் தன்னைப்பார்த்து சிரித்ததாகவும், இது மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அந்த பாடசாலைக்கு மீண்டும் செல்லமாட்டேன் என பாதிக்கப்பட்ட மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால் சம்பம் அறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள், தண்டனை கொடுத்த ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved