Friday, 22 September 2017

இலங்கையில் காதலனை கரம் பிடிக்க பெண் செய்த அசிங்கமான செயல்!

அநுராதபுரம்-நொச்சியாகம பகுதியில் காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை தனது காதலன் பாலியல் பலாத்காரம் செய்த்தாக பெண் ஒருவர் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய குற்றம் சாற்றப்பட்ட காதலனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்

எனினும் காதலன் அவ்வாறானதொரு சம்பவம் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்திய போது பெண்ணின் முறைப்பாடு பொய் என தெரிய வந்துள்ளது.

தனது காதலனை திருமணம் செய்துக்கொள்வதற்காகவே தான் இவ்வாறு முறைப்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொய் முறைப்பாட்டினை மேற்கொண்டதற்காக குறித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: