இலங்கையில் மீன்களின் விலையில் பாரிய மாற்றும்? காரணம் இது தான்!

Published On Wednesday, 13 September 2017 | 13:11:00

இலங்கையின் தெற்கே நிலவிவருகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. 

இவ்வாறு மீன்பிடித்தொழில் பாதிப்படைந்துள்ளமையினால் நாட்டின் பல பாகங்களிலும் மீன்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. 

மீனவர்களின் கருத்துப்படி, குறித்த பிரதேசங்களில் நிலவும் கடற் சீற்றங்களினால் மீன்பிடித்தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளது. இதனால் பிடிக்கப்படும் சொற்ப அளவிலான மீன்கள் அதிகூடிய விலையில் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த இயற்கை நிலைமையின் காரணத்தினால் மீனவர்களின் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், தொழிலுக்காகப் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையையும் தாம் எதிர்கொண்டிருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணத்தினால் ஸ்ரீலங்காவின் தென்பகுதி மீன்களை நம்பியிருக்கும் பகுதிகளில் மீன்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

இதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசக் கடலில் அவ்வாறான ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாததன் காரணத்தினால் மீனிடித்தொழில் சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. 

எனினும் தென்பகுதியிலிருந்து மீன் வியாபாரிகள் வடக்கு கிழக்குக்குப் படையெடுப்பதன் காரணத்தினால் வடகிழக்குப் பிரதேசங்களிலும் மீன் விலையில் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved