உதவும் உள்ளங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! தவறாமல் பகிருங்கள். முடிந்தவர்கள் உதவுவர்கள்.

Published On Thursday, 14 September 2017 | 13:25:00

கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறப்பான பெறுபேறுகளுடன் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீடத்தில் சட்டமாணி பட்டப்படிப்பைத் (LL.B) தொடர்வதற்கென தெரிவாகி இருக்கின்றாள் அம்மாணவி. மிக விரைவில் அவளது பல்கலைக்கழக வாழ்வு தொடங்கவுள்ளது.

என்றாலும் –

வறுமை தலைவிரித்தாடும் குடும்பம்…
அன்றாட அடிப்படைச் செலவுகளுக்கே போதாத குடும்ப வருமானம்…
பல்கலைக்கழக வாழ்வுக்கும்… பல்கலைக்கழக விடுதி வாழ்க்கைக்கும்… தயாராவதற்கான அடிப்படைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக்கூட பொருளாதார வசதியில்லாத திண்டாட்ட நிலை…

இத்தனைக்கும் மத்தியில், “அவளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனப் பரிசீலியுங்கள். அங்ஙனம், உங்களால் முடியாதவிடுத்து உதவக்கூடிய யாருக்காவது இச்செய்தியை எத்திவையுங்கள்” என அவளது குடும்பம் சார்பில் என்னை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ள ஒரு கோரிக்கை.

எனது சக்திக்குட்பட்ட வகையில், அவளது பல்கலைக்கழகக் கற்றலுக்குத் தேவையான ஒரு தொகுதிப் புத்தகங்களைக் கொள்வனவு செய்தும், ஒரு தொகைப் பணத்தை ஏற்பாடு செய்தும் வைத்திருக்கிறேன். விரைவில், அவற்றை அவளது வீடு தேடிச்சென்று கையளிக்கவுள்ளேன்.

என்றாலும், மிகப்பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வாழும் அவளுக்கு, மேற்சொன்னவை போதுமானளவு உதவியாக அமையாதென்பது திண்ணம்.

எனவே, இந்த நல்ல பணியில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ள நல்லுள்ளங்களும், இந்த மாணவி தனது பல்கலைக்கழகக் கல்வியைப் பூரணப்படுத்திக்கொள்ளும் வரை அவளுக்கு புலமைப்பரிசில்களை வழங்கக்கூடிய / அதற்காகப் பரிந்துரைக்கக்கூடிய நண்பர்களும் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

தேவையானோருக்கு குறித்த மாணவி பற்றிய பிரத்தியேகத் தகவல்களை தனிப்பட்ட முறையில் வழங்கவும் தயாராகவுள்ளேன். (அதற்கான முறையான அனுமதி, அம்மாணவியிடத்திலிருந்து பெறப்பட்டுள்ளது)

எல்லாம் வல்ல இறைவன் நம் தூய பணிகளை அங்கீகரித்துக்கொள்வானாக!

முடியுமான வரை இப்பதிவை SHARE செய்யுங்கள்.


Irham Segu Dawood LL.B (Col)

Attorney-at-Law
0773851575
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved