வங்காளதேசம் சென்ற அகதிகளை திரும்ப ஏற்க தயார் என மியான்மர் தலைவர் சூ கி அறிவிப்பு

Published On Wednesday, 20 September 2017 | 01:27:00

வங்காளதேசம் சென்ற அகதிகளை திரும்ப ஏற்க தயார் என மியான்மர் தலைவர் சூ கி தெரிவித்து உள்ளார்.

மியான்மர் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரம் உலக அரங்கில் எதிரொலித்து உள்ளது. இவ்விவகாரம் தற்போது நடந்தது வரும் ஐ.நா. சபை கூட்ட நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெற்று உள்ளது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் உலக நாடுகளின் நெருக்கடியை அடுத்து சூ கி ஐ.நா. பயணத்தை தவிர்வித்துவிட்டார். மாறாக இன்று அந்நாட்டு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, சர்வதேச கண்காணிப்பு குறித்து மியான்மருக்கு அச்சம் ஏதும் இல்லை. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ராகினே மாகாணத்தின் பிற மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்கும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இந்த மோதலில் சிக்கிக்கொண்ட மக்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். முஸ்லிம்கள் மட்டுமல்லாது ராக்கின் மக்களும் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். அங்கு பிற சிறுபான்மை சமூகத்தினரும் உள்ளனர் என்பதை உலகம் அறியாது. இடம் பெயர்ந்த மக்களுக்கு மனித நேய உதவிகள் வழங்கப்பட்டன. ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

5–ந் தேதியில் இருந்து அங்கு ஆயுத மோதல்கள் இல்லை. வங்காளதேசத்துக்கு சென்றவர்களுக்காக கவலைப்படுகிறோம். மெஜாரிட்டியான முஸ்லிம் மக்கள் வெளியேறவில்லை. கிராமங்களில் 50 சதவீதத்தினருக்கும் மேலான முஸ்லிம்கள் அப்படியே இருக்கின்றனர். வங்காளதேசத்துடனான உறவை வலுப்படுத்த அரசு பாடுபடுகிறது. இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் 1993–ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தி, மியான்மர் திரும்ப விரும்புகிற அகதிகளை திரும்ப எடுத்துக்கொள்ள எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம்.மதம், இனம், அரசியல் சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் மியான்மர் பிளவுபட விரும்பவில்லை என்றார். 

இதற்கிடையே ஐ.நா.வின் விசாரணை குழுவை மியான்மர் முழுவதும் தடையின்றி பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து உள்ளது. ஐ.நா.வின் உண்மை அறியும் குழுவின் தலைவர் மார்சுகி தருஸ்மான், இப்போது மியான்மரில் உள்ள நெருக்கடி தொடர்பாக விசாரிக்க மியான்மரில் விசாரணை குழுவை முழுவதும் தடையின்றி பிரவேசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறிஉள்ளார். மியான்மர் அரசு ஐ.நா.வின் விசாரணையை நிராகரித்துவிட்டது, அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

மியான்மரில் மிகவும் பயங்கரமான மனிதநேய நெருக்கடியானது உள்ளது, உடனடி கவனம் தேவையானது என கூறிஉள்ளார் மார்சுகி தருஸ்மான். சூ கி அரசு தொடர்ச்சியாக ஐ.நா.வின் விசாரணைக்கு கண்டனம் தெரிவிக்கிறது, விசாரணையானது பலனளிக்காது என கூறுகிறது. விசாரணையில் மியான்மர் அரசு ஒத்துழைப்பு அளிக்காது எனவும் தெரிவித்துவிட்டது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved