துபாய் பிரபல ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்! மயிரிழையில் உயிர் தப்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

Published On Sunday, 17 September 2017 | 13:00:00


துபையின் மிக மிக பரப்பரப்பான சாலை ஷேக் ஜாயித் ரோடு, பக்கத்திற்கு 6 லேன்கள் என மொத்தம் 12 லேன்கள் உள்ள இந்த சாலையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிரம்பி வழியும், குறுக்கு புகுந்து கடப்பதென்பது உயிரோடு விளையாடுவதற்குச் சமம்.

இந்த ஷேக் ஜாயித் சாலையில் 60 வயது மதிக்கத்தக்க, வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்திருந்த அரபி ஒருவர் திடீரென 6 லேன்களை குறுக்கே புகுந்து கடந்தவர் பின் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரேறி குதித்து மறுபக்கத்திலுள்ள 6 லேன்களையும் சிறுகாயங்களுமின்றி கடந்து சென்றவரை போலீஸார் 'லபக்' என பிடித்துச் சென்றனர் ஆனால் இவர் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக திடீரென திக்குமுக்காடிய வாகனங்கள் தான் ஒன்றுக்கு ஒன்று இடித்துக் கொண்டு நின்றன, நல்லவேளை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

போலீஸ் விசாரணையில் துபையில் சாலைகளை குறுக்கே சென்று கடக்கக்கூடாது என்ற சட்டம் தனக்குத் தெரியாது என்றவரின் உறவினர்களை ஹோட்டல்களில் இருந்து வரவழைத்து, அவரை இனி தனியே நடமாடவிடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தனர். உயிரும் தப்பி தண்டனையிலிருந்தும் தப்பியது அதிசய நகழ்வே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved