Thursday, 28 September 2017

பொலன்னறுவையில் இரு இளம் பௌத்த பிக்குகள் மீது சரமாரி தாக்குதல். காரணம் இது தான்!

பொலன்னறுவையில் இரு இளம் பௌத்த பிக்குகள் மீது சரமாரி  தாக்குதல் நடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

பொலநறுவை , கெமுனுபுற என்ற இடத்தில் இருவர்  தனக்கு தொலைபேசி ஊடாக தொந்தர தருவதாகவும், இவர்கள் இளம் பிக்குகள் எனவும்  பிரதேச யுவதி ஒருவர் தனது உறவினர்களிடம் முறைப்பட்டுள்ளார்.


இது சம்மந்தமாக விசாரணை செய்ய சென்ற வேளை குறித்த இரு இளம் பிக்குகளுக்கும் யுவதியின் உறவினர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின் அது கைகலப்பாக மாறி பிக்குகள் மீது சராமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பிக்குகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதே வேளை இவர்களை தாக்கிய யுவதியின் உறவினர்கள் என கூறப்பட்டும் ஐவரை தாம் கைது செதுள்ளதாக பொலன்னறுவை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Report by - ஆரிப் S நளீம்

Author: verified_user

0 comments: