3 மாதங்களின் பின் கத்தார் அமீர் - சவூதி இளவரசர் தொலைபேசியூடாக பேச்சு! என்றாலும் கை நழுவிய வாய்ப்பு

Published On Saturday, 9 September 2017 | 10:47:00

கடந்த மூன்று மாதங்களாக ராஜதந்திர உறவுகளைத் துண்டித்து முறுகலில் ஈடுபட்டுள்ள சவுதி – கட்டார் இடையேயான சமாதான முயற்சியொன்று நேற்றைய தினம் இரு நாட்டு ஊடகங்களின் செயற்பாட்டால் கை நழுவிப் போயுள்ளது.

சவுதி முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை கட்டார் அமீர் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ள நிலையில் கட்டார் தேசிய செய்தி ஊடகம் (QNA) அதனை தெளிவாகப் பிரசுரிக்காது சவுதி தரப்பே முதலில் அழைப்பை மேற்கொண்டதாக நேற்றைய தினம் செய்தி வெளியிட்டதன் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு நழுவியுள்ளது. 

மூன்று மாதங்களின் பின் இரு நாட்டின் முக்கிய தலைவர்கள் நேரடியாக தொலைபேசியில் உரையாடிக் கொண்ட முதலாவது சந்தர்ப்பத்திலேயே சர்ச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான முதற்கட்ட முயற்சியாக இரு விசேட பிரதிநிதிகளை நியமிக்க சவுதி தரப்பு முன் மொ ழிந்துள்ள அதேவேளை ஆரம்ப சர்ச்சைக்குக்குக் காரணமான கட்டார் தேசிய செய்தி நிறுவனம் தவறான முறையில் செய்தி வெளியிட்டதன் பின்னணியில் பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் பின் போடப்பட்டுள்ளது.

சவுதி – கட்டார் முறுகலைத் தீர்த்து வைக்க தாம் முன் வருவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தொலைபேசி அழைப்பும் ட்ரம்பின் வழிகாட்டலிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved