கட்டாருக்கு எதிரான தடைகளை நீக்குங்கள்: பிரான்ஸ் கோரிக்கை

Published On Saturday, 16 September 2017 | 09:20:00

வளைகுடா நாடுகள் மத்தியில் கூட்டுறவும் ஒத்துழைப்பும் மீண்டும் மலர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரெஞ்சு அதிபர் மக்ரன், கட்டாருக்கு எதிரான தடைகளை நீக்கும்படி சவுதி கூட்டணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டார் அமீருடனான சந்திப்பையடுத்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்ரன், அரபு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் கடும்போக்கு சூழ்நிலையால் பல குடும்பங்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கட்டார் அமீர் – சவுதி இளவரசர் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தை முயற்சியும் கட்டார் தேசிய ஊடகம் வெளியிட்ட திரிபு படுத்தப்பட்ட செய்தியால் தடைப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved