செல்பி எடுக்க முயன்றவரை, வெறியுடன் தாக்கிக்கொன்ற யானை

Published On Tuesday, 5 September 2017 | 14:11:00

(அடையாளப்படம்)
ஒடிஸா மாநிலம், ரூர்கேலா அருகே காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். அந்த யானையுடன் அவர் சுயபடம் (செல்ஃபி) எடுக்க முயன்றபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதுதொடர்பாக, வன பாதுகாப்பு அதிகாரி திலீப் சாஹு கூறியதாவது: இங்குள்ள ராஜ்கங்பூர் வனச் சரகத்தில் 10 யானைகள், கடந்த சில வாரங்களாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. அவற்றில், ஒரு யானை மட்டும் வழி தவறி, தனியாகச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், மாண்டியாகுடார் கிராமம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் அந்த யானை வெள்ளிக்கிழமை இரவு நுழைய முன்றது. அதைப் பார்த்த கிராம மக்கள், அந்த யானையை விரட்டிப் பிடிக்க யற்பட்டனர்.

இதனிடையே, ஏற்கெனவே தனது கூட்டத்தைப் பிரிந்ததால், கோபத்திலும், பீதியிலும் இருந்த அந்த யானை, அருகில் சென்று சுயபடம் எடுக்க முயன்ற அசோக் பாரதி (30) என்பவரை வெறியோடு தாக்கியது.

இதில், படுகாயம் அடைந்த அவர், சனிக்கிழமை உயிரிழந்தார் என்றார் அந்த அதிகாரி.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved